பாகிஸ்தானில் கெத்து காட்டும் அஜித்தின் “துணிவு”படம்.. வெளிவந்த உறுதியான தகவல்

ajith
ajith

நடிகர் அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா என சொல்லிக் கொண்டே போகலாம் இந்த லிஸ்டில் இணைந்தவர் தான் ஹச். வினோத்..

இவருடன், அஜித் கைகோர்த்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கடந்த பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிக்காட்டியது. அதே சமயம் துணிவு படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால்..

படம்  ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது குறிப்பாக தமிழை தாண்டி வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலும் நல்ல வசூலை தட்டி தூக்கியது. இதுவரை மட்டுமே உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் 260 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

இன்னமும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக துணிவு ஓடிக் கொண்டிருப்பதால் பல கோடிகளை அள்ளும் என துணிவு படக்குழு நம்பி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி அடுத்தடுத்த சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான பிறகு பல்வேறு நாடுகளில் துணிவு திரைப்படம் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் துணிவு படம் டாப் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளது இதனை பிரபலம் ஒருவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். இதோ நீங்களே பாருங்கள்.