நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அஜித்தின் “துணிவு” வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவலால் கொண்டாடி தீர்க்கும் தல ரசிகர்கள்

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் கடைசியாக நடித்த வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை தொடர்ந்து இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து  அஜித் நடித்த திரைப்படம்  துணிவு.

இந்த படம் முழுக்க முழுக்க  பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிகாட்டியது. மேலும் படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் போன்றவும் சூப்பராக வொர்க் அவுட் ஆகியதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்தது..

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், பவானி ரெட்டி, ஜான் கொக்கின், ஜி எம் சுந்தர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், மோகனசுந்தரம், அஜய், தர்ஷன், பால சரவணன், பிரேம், கே ராஜன், குமார் நடராஜன், ஏ எல் அழகப்பன், ருத்ராட் சிங் .. மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக   நடித்திருந்தனர்.

துணிவு படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி 220 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து netflix OTT தளத்திலும் வெளியாகி துணிவு திரைப்படம் பல வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில்  2023 -ல் வெளியான படங்களில் அஜித்தின் துணிவு திரைப்படம்..

நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக netflix OTT தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் 2023 மிகப்பெரிய வெற்றி படம் துணிவு எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகின்றனர் இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்.