மீண்டும் பூஜையை போட்ட அஜித்தின் “துணிவு” படக்குழு..! எதற்காக தெரியுமா.? இதோ புகைப்படம்..

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து ஆக்சன் படங்களை அதிகம் கொடுத்து வருகிறார் அந்த படங்களும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது அந்த வகையில் இப்பொழுது கூட ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து அவர் நடித்துவரும் திரைப்படம் துணிவு இந்த படமும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

துணிவு படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், யோகி பாபு, ஜான் கோக்கின் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் முதல் முறையாக நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ஒரு படம் பண்ண இருக்கிறார் அந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்  என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு படம் குறித்து ஒரு தகவல் வெளியாகிய உள்ளது அது குறித்து விலாவாரியாக தற்போது நாம் பார்ப்போம் அதாவது அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று இந்த படத்தின் டப்பிங் பூஜை வெற்றிகரமாக துவங்கி உள்ளது.

அந்த பூஜையில் இயக்குனர் ஹச்.வினோத் மற்றும்  பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அஜித்தின் துணிவு படத்தின் அந்த பூஜை புகைப்படத்தை..

thunivu
thunivu