நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கும் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ்க்காக காத்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா போன்ற பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி அன்று இந்தப் பாடல்களின் வீடியோ வெளியாக இருக்கிறது. அதாவது இதற்கு முன்பு இந்த பாடல்களின் வரிகள் இணையதளத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அந்த பாடலின் வீடியோ வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அமீர், பாவனி, சிபி ஆகியவர்கள் நடித்திருந்தனர் என்பதை தங்களுடைய சோசியல் மீடியாவின் மூலம் தெரிவித்திருந்தார்கள் மேலும் இதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலம் துணிவு திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து. இவர் யூடியூப் மூலம் பிரபலமான நிலையில் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் துணிவு திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இவரை அடுத்து பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், டான்சர் ரமேஷ் மற்றும் சில யூடியூப் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக சமீப பேட்டி ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் அஜித்தை தொடர்ந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இவ்வாறு இதனை தொடர்ந்து ஜிப்ரானி இசையமைப்பில் உருவாகியுள்ள நடிகர் அஜித்தின் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.