இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக பயணித்தார். அதனை தொடர்ந்து அடுத்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்தை இயங்கினார். இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றியடைந்ததை அடுத்து சினிமா உலகில் இயக்குனராக தன்னை தக்கவைத்துக் கொண்டார்.
மேலும் இந்த படத்தின் மூலம் நயன்தாராவை காதலித்து இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் விக்கி மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்டனர். கல்யாணம் முடிந்த கையோடு சில நாட்கள் ஊர் சுற்றி வந்த நிலையில் மீண்டும் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியா போட்டியின் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபக்கம் அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதால் அந்த படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன் அஜித் குறித்த சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது, ஒரு படத்திற்காக வேலை செய்யும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அந்த வேலையை செய்தால் அந்த படம் வெற்றி அடையும் அதற்கு அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அஜித் எப்பொழுதும் கூறுவார். மேலும் ஒரு படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு அந்த படத்தை தன்னுடைய படமாக நினைக்க வேண்டும்.
அது அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். அது தன்னுடைய படங்களில் இருக்குமாறும் அஜித் பார்த்துக் கொள்வார். அதனால் தான் அஜித் படங்களில் வேலை செய்ய அனைவரும் விரும்புவார்கள் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.