அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வலிமை. பல பிரச்சனைகளையும் எதிர்ப்பையும் தாண்டி வர உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் சும்மாவே அஜித் படங்களை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள் ஆனால் இரண்டு வருடம் கழித்து அஜித் திரைப்படம் வர இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இந்த நிலையில் அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அம்மா பாடல், வேற மாதிரி பாடல், glimpse வீடியோ கடைசியாக வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ என எல்லாமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் ரசிகர்களையும் தாண்டி திரையரங்க உரிமையாளர்களும் வலிமை படத்தை கைப்பற்ற தற்போது போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.
மேலும் வலிமை திரைப்படம் முதல் நாள் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியாகும் அதன் காரணமாக முதல் நாள் மட்டுமே 8 காட்சிகள் புறப்படும் என தெரியவருகிறது இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
மேலும் படக்குழுவும் இதனால் ஒரு மிகப்பெரிய ஒரு தொகையை அல்ல பிளான் போட்டு உள்ளது.
பல சாதனைகளை அடித்து நொறுக்கி புதிய சாதனை படைக்கும் தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் மதுரையில் மட்டும் 17 அதை சுற்றி உள்ள திரையரங்குகள் மேலூர், திருமங்கலம், சோழவந்தான், நாகமலை, உசிலம்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தலா ஒரு திரையரங்குகள் என மொத்தம் இருபத்தி நான்கு திரையரங்குகள் மதுரையை சுற்றி இருக்கின்றன.
அண்மையில் வந்த மாஸ்டர் திரைப்படம் கூட மதுரையில் 22 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது ஆனால் முதல் முறையாக அஜித்தின் வலிமை திரைப்படம் மொத்தம் இருபத்தி நான்கு திரையரங்குகளிலும் வெளியாக த இருக்கிறதாம் அந்த அளவிற்கு திரையரங்க உரிமையாளர்களும் எவ்வளவு காசு கொடுத்தாலும் வலிமை படத்தை வாங்க திரையரங்க உரிமையாளர்களும் ஆர்வமாக இருக்கின்றனராம்.