தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை படம்.! எப்போது தெரியுமா..

valimai
valimai

அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை கண்ட திரைப்படம் வலிமை இந்த படத்தின் ஷூட்டிங் முன்பே எடுக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் வலிமை திரைப்படமும் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியது.

படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ஆக்சன் சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. வலிமை படம் வசூல் ரீதியாகவும் முதல் நாளில் இருந்து அடித்து நொறுக்கியது. தொடர்ந்து வசூலில் நல்ல வேட்டை வலிமை படம் கண்டதால் 200 கோடிக்கு மேல் அள்ளியதாக கூறப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறுகினார்கள். இந்த திரைப்படம் ஒரு மாதம் கழித்து  OTT தளத்தில் வெளியாகியது. ZEE 5 OTT தளத்தில் படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று அதிலும் பல்வேறு புதிய சாதனைகளை செய்தது.

இப்பொழுது வலிமை திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதுவும் முக்கிய நானான அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வலிமை திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் அப்போ தல பிறந்தநாள் மிகப்பெரிய ஒரு செலிப்ரேஷன் செய்ய இருப்பதாக கூறி உள்ளனர். அஜித் பிறந்தநாளில் லேட்டஸ்ட் படமான வலிமை படத்தை பார்ப்பது நல்ல விஷயம் எனவும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.