நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி துணிவு திரைப்படம் கோலாகலமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை எதிர்ப்பு விஜயின் வாரிசு படமும் வெளியானது ஆனால் துணிவு திரைப்படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது.
படம் வெளிவந்து 25 நாட்களில் கடந்த பிறகும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் 100 கோடி மேலும் உலக அளவில் 200 கோடிக்கு மேலும் வசூல் அள்ளி உள்ளது. இன்னமும் சில கோடிகளைஅ ஜித்தின் துணிவு படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் AK 62 படத்தில் நடிக்க உள்ளார். அதை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை அஜித் அல்லது லைகா நிறுவனம் சைடுல இருந்தோ வரவில்லை..
இந்த நிலையில் துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. துணிவு படத்திற்கு அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தே மிகப்பெரிய பிரமோஷன்னாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் வெற்றி தோல்வியை ஒரே மாதிரி தான் அணுகுவதாக தெரிவித்தார். துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் தமிழிலும் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க இருக்கிறார் தற்பொழுது அதற்கான நல்ல கதையை தான் அவர் தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.