நடிகர் தனுஷ் தொடர்ந்து சிறப்பான படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெற்றியை கண்டு வருகிறார். அந்த வகையில் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி என அடுத்தடுத்த படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
இதில் முதலாவதாக வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. மறுபக்கம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுக்தா மேனன், சாய்குமார், tanikella bharani மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பள்ளி மாணவனாக நடித்து வருவதாக தெரிய வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோராக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சம்யுத்தா மேனன் தொடர்ந்து பல்வேறு நேர்காணல்களில் சில தகவல்களை குறிப்பிட்டு வருகிறார் அதில் அவர் சொன்னது நான் அஜித்தின் தீவிர ரசிகை.
இந்த படத்தின் ஒரு முக்கிய பாடல் காட்சி படமாக்கப்படும் பொழுது அந்த ரொமான்ஸ் கட்சியில் அஜித்தின் வாலி பட பாடலை போட்டு தான் ஷூட்டிங் எடுத்தோம் என வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் அது படக்குழுவையே ரொம்ப சந்தோஷப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.