தமிழ் திரையுலகில் தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்படும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அஜித்தின் மகனான அத்விக் குமாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் அவரது அம்மாவான ஷாலினியுடன் இருக்கிறார்.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த அத்விக் திடீரென்று உயரமாக வளர்ந்து விட்டாரே என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இது அந்த புகைப்படம்.