அஜித்திற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு திறமையாக இருந்து வரும் அவருடைய மகன் ஆத்விக்கின் செயலை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர் மேலும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் சினிமாவில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்திருக்கிறாரோ அதனை விட பைக் ரெய்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.
பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பதே அஜித்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. எனவே அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது முடிந்த நிலையில் தற்போது உலக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இதனுடைய முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் இதுவரையிலும் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். எனவே இதனை அடுத்த கட்ட பைக் சுற்றுலாவை இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் தனது உலக சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அஜித்.
அஜித் எந்த அளவிற்கு பைக் ரைடிங் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறாரோ அதேபோல் இவரை விடவும் அவருடைய மகன் ஆத்விக் தனி திறமையுடன் தனது அப்பாவிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறார். அதாவது கால்பந்து விளையாட்டின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஆத்விக் தற்பொழுது புகழ்பெற்ற சென்னையின் எஃப்.சி அணியின் யூத் டீமிற்க்காக களம் இறங்கி விளையாட உள்ளார்.
அந்த வகையில் அவர் கால்பந்து விளையாடிய போது எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆத்விக் விளையாடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் கமெண்டில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என கூறி வருகிறார்கள்.