நயன்தாரா பேசிய பேச்சால் கிடுகிடுவென உயரும் அஜித்தின் சம்பளம் – வெளிவரும் உண்மை.?

nayanthara and ajith
nayanthara and ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.  அந்த வகையில் அஜித்தின் 61 படத்தை மீண்டும் ஹச். வினோத் இயக்க உள்ளார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தை நான்கைந்து மாதங்களுக்குள் எடுத்துவிட்டு அடுத்ததாக தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது AK 62 படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறதாம்.

விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு ரொம்ப பிடித்துப்போனது உடனடியாக இந்த கூட்டணி கூடியதாக கூறப்படுகிறது. இந்த படமும் மிக விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கியிருப்பதால் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. உண்மையில் அஜித்துக்கு 81 கோடி கிட்டத்தட்ட தான் சம்பளமாக பேசப்பட்டது ஆனால் நயன்தாராவோ அஜித்திற்கு சம்பளத்தை  ஏற்றி கொடுத்தால் நல்லது என தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

AK 62 திரைப்படத்தை முதலில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது அஜித்திற்கு 81 கோடி பேசப்பட்டது உடனடியாக நயன்தாரா லைக்கா நிறுவனத்திற்கு கால் செய்து 100 கோடி சம்பளம் கொடுத்தால் நாம் ஒரு படம் பண்ணலாம் என்று பேசியுள்ளார் அஜித் என்றால் 100 கோடி என 105 கோடி கூட தரலாமே லைகா நிறுவனம் கூறியது. அதனால் AK 62 படத்தை தன்வசப்படுத்தி தற்போது மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.