லியோ படத்தை ஓரம்கட்ட அஜித் போட்ட பக்கா பிளான் மண்டை குடைச்சலில் இயக்குனர் மகிழ் திருமேனி

ajith
ajith

சினிமா உலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அனைவருக்கும் பிடித்த ஒரு மனிதராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவரது நல்ல குணம் மற்றும் அவருக்கான ரசிகர்களும் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ரசிகர் மன்றமே எனக்கு வேண்டாம் அவரவர் அவர்களது வேலையை பாருங்கள் என்று கூறினாலும் அஜித்தின் ரசிகர்கள் அவரை விடாமல் துரத்துகின்றனர்.. அஜித்தும் அவரது ரசிகர்களுக்காக தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகியது.

இந்த படம் ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியாகி ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது அவரது 62 ஆவது படத்திற்கான கதை உருவாகி வருகிறது இந்த படத்தின் கதையை முதலில் ஒரு ஒன் லைன் ஸ்டோரியாக விக்னேஷ் சிவன் கூறி ஓகே செய்துள்ளார் ஆனால் அந்த முழு கதையை கூறும்போது லைகா நிறுவனம் மற்றும் அஜித்திற்கு திருப்தி அளிக்காததால்..

இயக்குனரை மாற்றி உள்ளனர். அதன்படி தற்போது அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன. மேலும் விஜயின் லியோ படத்துடன் தன் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களிடம் கதை கூறி கதைகளில் சில மாற்றங்களை செய்து வருகிறார்.

இதனால் ஒவ்வொருவரின் கருத்துகளையும் கேட்டு கதையை எழுதுவதால் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு  குழப்பம் ஏற்படுகிறது. மேலும் அஜித் இந்த படத்தின் ஷூட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு பைக்கில் வேர்ல்டு டூர் செல்ல திட்டமிட்டு இருப்பதால் மகிழ்திருமேனியை தொல்லை செய்வதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.