திரை உலகில் சைலண்டாக இருந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகிறார் அந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன அந்த வகையில் வலிமை..
படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் ஒரு மாஸான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றி கரமாக முடித்த நிலையில் படக்குழு அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து இருக்கிறது.
படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக ஏதேனும் அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறிய வருகின்றனர் இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் போஸ்டர் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளன.
வெகு விரைவிலேயே இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளிவரும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு.. படத்தில் இருந்து அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது. நடிகர் அஜித் குமார் துணிவு படப்பிடிப்பில் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல உங்க லுக் செம்ம சூப்பரா இருக்கு எனக் கூறி கமெண்ட் அடித்தும் லைக்குகளை அள்ளி வீசியும் அசத்தி வருகின்றனர் இதோ நடிகர் அஜித் செம்ம மாசாக இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
#Thunivu🔥🔥🔥 pic.twitter.com/Flb87UguwP
— Director H Vinoth Fans Club (@dirhvinoth7) November 1, 2022