நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது ஏ கே 61 படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் தீபாவளிக்கு வெளிவருமென படகுழு கூறியது ஆனால் தற்பொழுது வரை படத்தின் படப்பிடிப்பு முடிக்காமல் இருப்பதால் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இது இப்படி இருக்க அஜித் 62 வது படத்திற்கான வேலைகளையும் ஒரு பக்கம் பார்த்து வருகிறார்.
அஜித்தின் அடுத்த படத்தை நயன்தாராவின் கணவன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த நிலையில் அஜித் பற்றிய செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணமே இருகின்றன. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனரும், நடிகருமான ஆர் ஜே பாலாஜி நடிகர் அஜித்குமார் குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் சொன்னது கமல் நடித்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாவது பாகத்தில் அஜித்தை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார் மேலும் அவர் சொன்னது அஜித் அண்மைக்காலமாக ஆக்சன் திரைப்படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவர் காமெடி கலந்த படங்களில் நடித்தால் நிச்சயம் சூப்பராக இருக்கும் என தெரிவித்தார்.