தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தல அஜித் சினிமா ஆரம்பத்தில் பல்வேறு விதமான படங்களையும் தோல்விப் படங்களையும் கொடுத்து இருந்தாலும் தற்போது வரையிலும் தல ரசிகர்கள் அவரை சினிமா உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பார்கள் அந்த காரணத்தினால் இன்றும் சினிமா உலகில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சமீபகாலமாக சிறப்பான இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிப்பதால் அவரது படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தி உள்ளன. தற்போது கூட சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஹச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் இருக்கின்றனர் ஆனால் அதற்கு முன்பாக ரசிகர்கள் பட்டாளத்தை சந்தோஷப்படுத்த ஒரு சிறப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான் அதிலும் குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தற்போது வரையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் யூடிபில் மட்டும் சுமார் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது அதாவது 15 கோடி பேர் இந்த பாடலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியை தல ரசிகர்கள் இணைய தளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.