தல அஜித் சினிமா உலகில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். ஆரம்ப கால கட்டத்தில் தன்னை நம்பி வந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதையை கேட்காமலேயே கமீட் ஆகி நடித்து கொடுத்தால் வெற்றி தோல்விகளை சந்தித்தார்.
ஆனால் சமீப காலமாக இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் தாண்டி கதையை நன்கு அறிந்து நடிப்பதால் வெற்றிகள் குவிக்க தொடங்கி உள்ளார். தற்போது ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் சூட்டிங் ஒரு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னும் முடிந்தபாடில்லை. இப்படி இருக்க ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை ஷூட்டிங் ஆரம்பித்தலிருந்து தற்போது வரையும் கேட்டுகொண்டு தான் வருகின்றனர். ஆனால் எந்தொரு அப்டேட்டை சரியாக கொடுக்காமலே இருகின்றது படக்குழு.
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது சரியாக வெளியிடுங்கள் என கேட்க தற்போது நிலவும் சூழல் சரியில்லை என்பதால் அதையும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபத்தின் உச்சியில் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது வலிமை திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அன்ஸின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதில் தல அஜித் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நபர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.