வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான அஜித்தின் நியூ லுக் போட்டோ.! இணைய தளத்தை அலறவிடும் தல ரசிகர்கள்.

valimai
valimai

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வளைத்துப் போட்ட நடிகர்களில் முதன்மையானவராக விளங்குகிறார் தல அஜித். அதிலும் சமீபகாலமாக சிறப்பம்சம் உள்ள படங்களை கொடுப்பதால் அஜித் அதிக ஆண் ரசிகர்களை  மேலும் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களையும் சமீபகாலமாக கவர்ந்து உள்ளார்.

இதனால் அஜீத் நடிக்க இருக்கின்ற படங்களுக்கு தற்போது வேற லெவலில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது அந்த வகையில் ஹச் . வினோத்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது மேலும் படத்தை முடிக்க படக்குழு தற்போது ஹைதராபாத் சென்று சூட்டிங்கை சொன்ன தேதியில் குறிப்பிட்டவாறு எடுத்து வருகிறது.

இருப்பினும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்காதது தான் மிகப்பெரிய ஒரு ஏமாற்றமாக இருந்து வருகிறது இதற்காக அஜித் ரசிகர்களும் தங்களால் என்ன முடியுமோ அங்கெல்லாம் சென்று வலிமைப்படுத்தி அப்டேட் கேட்டு பார்த்து விட்டனர் படக்குழு இதுவரை மௌனம் காத்து தான் வருகிறது.

இப்படி பஸ்ட் லுக் மற்றும் அப்டேட் எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் தல ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது வலிமை  படத்திலிருந்து அஜித்தின் லேட்டஸ்ட் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் அஜித் வேற லெவல் உடல் எடையை குறைத்து செம அழகாக இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.