தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்தான் நடிகர் அஜித். தமிழ் திரைவுலகில் ஒரு அங்கமாக திகழும் இவர் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அதுவும் முக்கியமாக இவர் நடிப்பில் உருவாகிவரும் ஏராளமான திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்தினை தரும் வகையில் அமைந்து வருகிறது.
இதன் காரணமாக இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
இவர் நடிப்பில் உருவாகி வரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகின்றனர். கடைசி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தினை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து போனிக்கபூர் தயாரிப்பில், ஹஸ்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 அஜித் நடித்து வருகிறார். இதனை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரமோஷன் தயாரிப்பில் AK 62 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும் இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கும், திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
AK 61 திரைப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கி ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகின்ற இந்த வருட தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஆதிவுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.
KING #AK Latest ❤️🔥#AjithKumar #AK61 pic.twitter.com/J2RC2KlQqZ
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) May 12, 2022