இந்தியில் ரீமேக்காகும் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! ரசிகர்கள் கொண்டாட்டம்

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் தான் ரசிகர் பட்டாளம் அதிமாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் ரசிகர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்தின் திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இதனை ரசிகர்கள் மிகவும் வைராக்கியம் உற்சாகத்திலும் இருந்து வருகிறார்கள்.

முதன்முறையாக அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படம் வீரம். இத்திரைப்படத்தின் மூலம் தான் இவர்கள் ஒன்றாக இணைந்தார்கள் அந்த வகையில் இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பொதுவாக ஒரு சில திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டால் அதனை வேறு மொழியில் ரீமேக் செய்வதும் வழக்கமாக உள்ளது.அந்த வகையில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தை முதலில் தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்கள் இத்திரைப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

கட்டமராயுடு என்ற பெயரில் வெளிவந்தது.இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை ஹிந்தியில்  ரீமேக் செய்ய உள்ளார்களாம். அந்தவகையில் ஹிந்தி ரீமேக்கில் அஜித் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு அக்ஷய்குமார் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் அக்ஷய் குமார் விலகியதால் சல்மான் கான் நடிக்க உள்ளாராம். அதற்கு பை ஈத் கபி தீவாளி என பெயர் வைத்துள்ளார்களாம். தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே லாக் டவுன் முடிந்தவுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.

சமீபத்தில்தான் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக கூறி இருந்தார்கள். தற்போது அஜித்தின் வீரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.