19 வருடங்களுக்கு முன்பே ரஜினிக்கு நிகராக அஜித்திற்கு மாஸ் ஓப்பனிங் இருந்தது.! பிரபல நடிகை அதிரடி பேச்சு.

ajith
ajith

முன்னணி நடிகர்களின் படம் மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் செய்வார்கள் அவரது ரசிகர்கள் என்பது நாம் அறிந்ததே ஆனால் அதில் முதன்மையானவராக விளங்குபவர் தல அஜித். அவரின் படம் திரையில் வெளி வரும் நாள் அன்று அதனை மிகப்பெரிய ஓபனிங் ஆக மாற்றி சாதனை படைப்பது தல ரசிகர்களுக்கு கை வந்த கலை.

சமீபத்திலும் அதனை நிகழ்த்திக் காட்டினர் அஜித் ரசிகர்கள் அஜித்தின் படம் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்களை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஓபனிங் இது அசத்தினார். இதனை போல அஜித் ரசிகர்கள் 19 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் செய்து அசத்தியுள்ளனர்.

கார்த்திக் சுப்பையா இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்  செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நக்மா, பாண்டியன் ,வசுந்தரா தாஸ், சரவண சுப்பையா, ஷர்மிளா போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தவர் மட்டுமல்லாமல் மற்றும் ரசிகர்களிடையே அஜித்தின் நடிப்பு மிகப் பெரிய அளவில்  பேசப்பட்டது. இப்படம் வெளிவந்த தற்போது 19 வருடங்கள் நிறைவடைந்துள்ள இதனையடுத்து தல  ரசிகர்கள் இதனை தற்போது சமூக வளைதளத்தில் ட்ரெண்டடாகி  வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்திய நடிகை நக்மா பேட்டி ஒன்றில் இப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அவர் கூறியது படத்தில் நடித்து முடித்துவிட்டு ரிலீஸ் சமயத்தில் நாங்கள் தியேட்டருக்கு சென்ற பொழுது நான் அசந்துவிட்டேன் அப்போத அஜித் படத்திற்கு ரஜினி படம் போல மாஸ் ஓபனிங் இருந்தது என கூறினார். இதனை அறிந்த தல ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.