தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டு வருபவர் தல அஜித். சமீபகாலமாக தல அஜித்தின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு சம்பளம் 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அஜீத் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதற்காக தல அஜித் 70 கோடி ரூபாய் வரை சம்பளமாக பேசி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது பொதுவாக தயாரிப்பாளர்கள் யாரும் படம் வெளியாவதற்கு முன்பே முழு சம்பளத்தையும் கொடுக்க மாட்டார்கள் ஆனால் போனிகபூர் அஜித்தை நம்பி சம்பளத்திற்கு அதிகமாக 20 கோடி அதிகமாக கொடுத்துள்ளார்.
இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதற்கு காரணம் அஜித் மீது உள்ள நம்பிக்கை தான் என கூறுகிறார்களாம். தல அஜித் வாங்கிய சம்பளத்தில் தற்பொழுது 140 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி வருகிறாராம்.
அந்த வீட்டில் அதிநவீன வசதிகளுடன் இருக்கும்படி அமைந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.