இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் படங்களை இயக்குவதற்கு முன்பாக சினிமாவுலகில் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்து சினிமா வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை 600028 என்ற படத்தை எடுத்திருந்தார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது அதனை தொடர்ந்து தல அஜித்தின் 50வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். முதல் படத்தைவிட இந்த படம் வெங்கட்பிரபு கேரியரில் மிக முக்கியமான படமாகும் அஜித்தின் 50வது படம் என்பதால் சற்று வித்தியாசமாக எடுக்க வேண்டும்.
அஜித்திற்கு ஆக்ஷன் கலந்த படங்கள்தான் பிடிக்கும் அந்த வகையில் மிக நேர்த்தியாக அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தை கொடுத்து இந்தப் படத்தை எடுத்திருந்தார் படம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக ஓடியதால் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்திற்கு பின் வெங்கட் பிரபு மற்றும் அஜித்தின் சினிமா பயணமும் அசுர வளர்ச்சியை எட்டியது.
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மங்காத்தா இரண்டாவது பாகத்தில் அஜித்தை நடிக்க வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டு வருகின்றனர் அதற்கு அவரும் ரெடியாக இருந்தாலும் கதை இல்லாமல் இருந்தது இந்த நிலையில் மங்காத்தா இரண்டாவது பாகத்தை அஜித் விஜய் ஆகியோர் சேர்ந்து அந்த படத்தில் நடித்தால் படம் சிறப்பாக இருக்குமென வெங்கட்பிரபுவின் விருப்பமாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பொழுது வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்து கேட்டுள்ளனர் அதற்கு அவர் கூறியது எனக்கு அஜித் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து ஆனால் இந்த படத்திற்கான கதையை நான் இன்னும் ரெடி செய்யவில்லை என கூறி உள்ளார்.