தமிழ் சினிமா உலகில் எப்போதுமே போட்டிகள் அதிகம் இருக்கும் அந்த வகையில் அஜித் விஜய்க்கிடையே மிகப்பெரிய ஒரு போட்டி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த போட்டி ஆறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த வருடம் பொங்கலை..
முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மோதுக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் செம்ம மாஸாக நடித்துள்ளார். தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் முழுக்க முழுக்க..
சென்டிமென்ட் திரைப்படமாக உள்ளது இதில் விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் படம் வெளிவந்த பிறகுதான் போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதே ஆரம்பித்துவிட்டனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால் வாரிசு, துணிவு படத்திற்கு சரிக்கு சமமான திரையரங்குகள் கொடுக்கக் கூடாது.
அஜித்தை விட விஜய் மிகப்பெரிய ஸ்டார் அதனால் விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு 50 திரையரங்குகள் எக்ஸ்ட்ராக வேண்டும் என தில் ராஜு சொல்லி இருந்தார். இது இணையதளத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியதோடு மட்டுமல்லாமல் அஜித் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் பைக் ரேஸ் சென்ற ஒரு போட்டோவை வெளியிட்டு no guts, no glory என பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தில் ராஜுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போட்டு உள்ளீர்கள் என கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்ட அந்த புகைப்படத்தை..
No guts no glory !!! pic.twitter.com/MI2cxgVwbp
— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022