திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகை தனது திறமையும் அழகையும் வெளிப்படுத்தினாலும் கூட அவருக்கு நேரம் நன்றாக இருந்தால் தான் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்கும் அதை தொடர்ந்து சரியாக பயன்படுத்தினால் உச்ச நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியும் ஆனால் ஒரு சில நடிகைகள் அதை தவறவிடுகின்றன.
அப்படி ஒருவரை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் அஜித்தின் மச்சனியும் ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி. முதலில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தார் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு oye! என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்து என்ட்ரி கொடுத்தார் இந்த படத்தில் அவருடைய நடிப்பு சுமாராக இருந்தது ஆனால் இந்த படத்திற்கு பிறகு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் மற்ற நடிகைகள் போல ஷாமிலியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
இதன் மூலம் பட வாய்ப்பை கைபற்ற முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷாமிலி பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வீரசிவாஜி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் நடித்த கதாபாத்திரத்தில் இவர் தான் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் ஷூட்டிங் இருக்கு சரியான நேரத்தில் வருவதில்லை.
மேலும் இவருடைய ஆட்டிட்யூட் கொஞ்சம் ஓவராக இருந்ததாம் இதனால் பல நாட்கள் ஷூட்டிங் நடைபெறாமல் போனது ஒரு கட்டத்தில் டென்ஷனான படக்குழு அவரை தூக்கிவிட்டு அனுபமா பரமேஸ்வரனை போட்டதாம் இதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.