நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிவர இருக்கிறது வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்கில் கோலாகலமாக வெளியாக இருக்கிறது மற்ற நாடுகளில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வலிமை திரைப்படத்தை ஹச். வினோத் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து அசத்தி உள்ளார் இதனால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் காத்திருக்கின்றனர் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் இருப்பதால் படம் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது முதலில் வலிமை திரைப்படத்தை OTT தளங்கள் கைப்பற்ற அதிக முனைப்பு காட்டின அதிலும் முக்கிய நிறுவனங்கள் ஒரு சில மிகப்பெரிய ஒரு தொகையை கொண்டு வந்து கொடுக்க ரெடி ஆனது.
ஆனால் தயாரிப்பாளர் போனி கபூரை படத்தை நான் திரையரங்கில் தான் வெளியிடுவேன் என அந்த ஆஃபரை எல்லாம் ஒதுக்கிவிட்டு தில்லாக நின்றார். மேலும் OTT தளங்களில் ஏன் வலிமை படம் வெளியாகவில்லை என்பது குறித்தும் அண்மையில் பேட்டி ஒன்றில் பதிலளித்தார் அதில் அவர் கூறியது OTT என்பது தற்போது Revenue வரும் ஒரு பங்கு.
அதிக ஆடியன்சை சென்று சேர்கிறது ஆனால் வலிமை போன்ற சில படங்கள் திரையரங்குகளில் எடுக்கப்பட்டவை. தியேட்டர்காகவே படங்கள் தயாரிப்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறி பேசினார் தயாரிப்பாளர் போனி கபூர்.