நிறைவேராமால் நின்று போன அஜித்தின் அதித ஆசை.! இந்த திரைபடத்தில் மட்டும் நடித்திருந்தால்.?

சினிமா உலகில் ஒரு படம் சிறப்பாக இருந்தால் போதும் அது பட்டிதொட்டி எங்கும் பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல சமீபகாலமாக மலையாள திரைப்படங்கள் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அயப்பனும் கோஷியும் திரைப்படம் திரைஅரங்கில் வெளி வந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மேலும் இப்படத்தினை பிற மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயப்பனும் கோஷியும் படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இப்திரையரங்கில் வெளிவந்து 50 கோடி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமில்லமால் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.இப்படத்தை சச்சி என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.

படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் அதுபோல தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் அவர்கள்அயப்பனும் கோஷியும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் இது போன்ற ஒரு கதையை தனக்கு ரெடி செய்யுமாறு கூறியுள்ளார்.

அதற்கு இயக்குனர் சச்சி அவர்களும் ஊரடங்கு உத்தரவு முழுவதும் முடிந்தபின் அஜித்தை சந்தித்து கதை சொல்ல ரெடியாக இருந்தாராம். திடீரென எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் இச்செய்தியை பல பிரபலங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதே போல தல அஜித் அவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. அஜித்தால் அவரது இறுதி சடங்கில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

சச்சி அவர்கள் அயப்பனும் கோஷியும் படத்தை தமிழில் இயக்கியிருந்தார்.மேலும் இப்படத்தில் நாயகனாக கார்த்தியும், பார்த்திபனும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினாராம்.