Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு சிறு லீவு விடுவது வழக்கம். அதில் தனது ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார் அந்த வகையில் பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, ட்ரோன் இயக்குதல்..
துப்பாக்கி சுடுதல் போன்றவற்றை தொடர்ந்து தற்பொழுது பைக் பிரியர்களுக்காக ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். மேலும் தன்னை நம்பி வரும் இல்லாதவர்களுக்கு உதவிகளையும் செய்து மகிழ்விக்கிறார் இதனாலையே அஜித் பலருக்கும் உதாரணமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கும் பிடிக்கிறது.
ரசிகர்கள் தாண்டி சினிமா பிரபலங்கள் கூட அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர் அப்படி வெள்ளி திரையில் நடன கலைஞராகவும் பணியாற்றி வருபவர் கலா மாஸ்டர் இவர் சமீபத்தில் அஜித்தை பற்றி பேசியது வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித்தை பார்ப்பது என்பது கஷ்டம் ஆனால் பார்த்துவிட்டால் பல நாட்கள் நெருக்கமானவர் போலவே பேசுவார்.
ஒரு நீண்ட கால நண்பர் இருந்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு உணர்வை நம்மிடமே ஏற்படுத்தி விட்டுப் போவார் அந்த அளவுக்கு கலகலவென பேசிக்கொண்டே இருப்பார். ஒரு சமயம் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கலாவிடம் ஒரு மூன்று நாள் நடனம் கத்துக்க அஜித் வந்தார்.
ஆனால் அந்த தெலுங்கு பட இயக்குனர் உயிரிழந்தார் அந்தப்படம் அப்படியே நின்று போனது எனக் கூறினார். அதன் பிறகு ஒரு விளம்பரப் படத்திற்காக மீண்டும் கலாவும், அஜித்தும் சந்திக்க நேர்ந்ததாம் அப்பொழுது கலாஜி கலாஜி என அஜித் பேசிக் கொண்டே இருந்தாராம்.. மிகவும் நல்ல மனிதர் அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களில் ஒன்று மற்றவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் பழகுவது தான் என கூறினார்.