இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. அதே தினத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாவதால் ரசிகர் மத்தியில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வாரிசு பட குழு ப்ரோமோஷனில் பிஸியாக இருந்து வருகிறது ஆனால் துணிவு படுகுழு எந்த ஒரு பிரமோசனும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறது. வாரிசு படம் ஒரு செண்டிமெண்ட் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதேபோல நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல துணிவு திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்று சொல்ல வேண்டும்.
இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ள நிலையில் கேங்ஸ்டா என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் இன்று ஏழு மணிக்கு வெளியாக இருந்த கேங்ஸ்டர் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கேங்ஸ்டா பாடலின் தீம் சாங் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் தற்போது துணிவு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அஜித் அவர்கள் இந்த பாடலில் ஒரு மாஸ் கெட்டப்பில் தெறிக்கவிடும் லுக்கில் இருக்கிறார்.
இதோ கேங்ஸ்டர் பாடல்.