சினிமா உலகில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன என்னதான் ஒரு புதிய படத்தை எடுத்தாலும் அதில் பழைய படத்தின் காபிகள் ஒன்னு ரெண்டு தெரிவது வழக்கம் ஆனால் ஒரு சிலர் அப்படியே அச்சு அசல் அதே போல படத்தை எடுப்பார்கள்.. அந்த வகையில் அஜித் நடித்த திரைப்படம் ஒன்று அப்படியே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்தது போலவே இருந்துள்ளது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்… 2000 ஆம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, அப்பாசாமி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படம் வசூலில் நல்ல சாதனை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக ஒரு நிகழ்ச்சியில் ராம்கோபால் வர்மா சொல்லி இயக்குனர் ராஜிவ் மேனனை கலாய்த்து தள்ளினார். பிரபல ஹாலிவுட் திரைப்படமான சென்ஸ்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற படத்தை காப்பி அடித்து தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் குமார் இது தெரிந்ததும் ரொம்ப வருத்தப்பட்டாராம் இருப்பினும் இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமாருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏராளமாக தேடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. என்னதான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் காப்பியடிக்கப்பட்ட திரைப்படம் ஆக இருந்தாலும் மக்கள் அதை புதிதாக தான் பார்த்து கொண்டாடினர்.
அதனால் தான் அந்த படமும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்திற்கு பிறகு ராஜ்குமார் தமிழில் பெரிய அளவில் படங்களை இயக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் ஒரு சில படங்களை இயக்கி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.