அஜித்தை கோபப்படுத்திய படக்குழு.? கேரவனுக்கு போய் வரேன்னு சொல்லி வீட்டுக்கு போன சம்பவம்..! அட இது எத்தனை பேருக்கு தெரியும்

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் துணிவு படத்தை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க மகிழ் திருமேனி உடன் கைகோர்த்து விடாமுயற்சி  திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் சினிமா ஆரம்பம் பல அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து படிப்படியாக முன்னேறினார்.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை என அடுத்தடுத்த படங்கள் வெற்றி அடைந்தன இருப்பினும் ஒரு கட்டத்தில் இவருடைய படங்கள் தோல்வி படங்களாக மாறின மேலும் கார் ரேஸ், பைக் ரேஸில் அதிகம் ஆர்வம் காட்டியதால் அஜித் சினிமாவை விட்டு விலகியதாக பேசப்பட்டது ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வபோது நல்ல படங்களை கொடுத்து வந்தார்.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன அஜித்து சினிமா உலகில் தற்போது சைலண்டாக இருக்கக்கூடியவர் என பலரும்  சொல்லி கேள்விப்படுகிறோம் ஆனால் அஜித் ஆரம்பத்தில் அப்படி இல்லை ரொம்பவும் கோபக்காரராக இருந்தார் என பலரும் கூறுகின்றனர் அப்படி அட்டகாசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வந்த நடிகை  பேக்கப் சொல்ல கோபப்பட்ட அஜித் என்னுடைய படத்திற்கு நீங்கள் எப்படி பேக்கப் சொல்லலாம் என கூறினாராம்.

இதே போல் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு தெரியாமலேயே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ஜி வெங்கடேஷை  தேர்வு செய்திருந்தனர்.  இவருக்கும், அஜித்துக்கும்  இடையே ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது

இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அஜித் அவரை சந்தித்து எப்படி இருக்கீங்க சார் என கூறினாராம் பிறகு கேரவனுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு அப்படியே அஜித் வீட்டிற்கு போய்விட்டாராம் இது பட குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாம். இந்த தகவலை  சினிமா பிரபலம் அந்தணன் கூறியுள்ளார்.