வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 61-வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளம் இயக்குனர் ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் மிகப் பிரம்மாண்ட பொருட்ச செலவில் படத்தை தயாரித்துள்ளார்.
துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, ஜான் கொக்கன், யோகி பாபு மகாநதி சங்கர், அஜய்..
பிக்பாஸ் பிரபலங்களான சிபி, ஆமீர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். படம் வெளி வருவதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த துணிவு படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் போக மறுபக்கம் ப்ரமோஷன் வேலைகளையும் படும் ஜோராக செய்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹச். வினோத் துணிவு படம் மற்றும் அஜித் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விலாவாரியாக கூறியுள்ளார்.. இந்தப் படத்தின் முழு கதையை நான் அஜித் சாருக்கு சொல்லவே இல்லை.. ஒரே ஒரு காட்சியை மட்டும் சொன்னேன் அது அவருக்கு ரொம்ப பிடித்து போக இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் அஜித்துக்கு பிடித்த அந்த காட்சியை படத்தில் இடம்பெறவில்லை என ஹச். வினோத் கூறினார் இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்.. பொங்கலில் துணிவு படத்தின் கை தான் ஓங்கும் எனக் கூறி ஹச். வினோத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.