எங்கள பாத்தா உங்களுக்கு மனுஷனா தெரியலையா.? ஏ.ஆர் ரகுமானை பார்த்து கொதித்து எழுந்த ரசிகர்கள்

ajith kumar
ajith kumar

Actor Ajith: ராக்ஸ்டார் அனிருத் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து சென்னை மற்றும் உலக அளவில் பல கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில் இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் சென்னை நிகழ்ச்சி ஏன் இப்படி ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறது என ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மேலும் நடிகர் அஜித்தின் குடும்பம் சந்தோஷமா இசை கச்சேரியை கண்டுகளித்த நிலையில் 30 ஆயிரம் கொடுத்து பிளாட்டினம் டிக்கெட்டுகளை வாங்கிய நாங்கள் ஏன் கண்ணீருடன் திரும்பி செல்ல வேண்டும் என ஏ.ஆர் ரகுமானை வெளுத்தெடுத்துள்ளனர் ரசிகர்கள்.

பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகள் அதிக விற்பனைக்கு விற்கப்பட்டது என்றும் ஏ.ஆர் ரகுமான் பிச்சை எடுக்கிறார். பணத்துக்காக தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும் பல்லாயிரம் ரூபாய் கொடுத்த டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சி அரங்கிற்குள்ளேயே செல்ல முடியாமல் சோகத்துடன் ரசிகர்கள் திரும்பி சென்று உள்ளனர்.

வெளியில் நடக்கும் பிரச்சனையே தெரியாமல் ஏ.ஆர் ரகுமான் உள்ளே ஜாலியா பாடிக் கொண்டிருக்கிறார். ரொம்பவே வொஸ்ட் என்றும் நாங்க எல்லாம் அவரது ரசிகர்கள் சும்மா ஒன்றும் வரவில்லை 5,000 முதல் 30,000 வரை காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவரை அனைவரையும் அழைத்து வந்திருக்கிறோம் ஆனால் இறுதியில் அவஸ்தை தான்.

இதில் ஏராளமானவர்கள் காணாமல் போய்விட்டனர் அடிகள், ரத்தம் என பல பிரச்சனைகள் அரங்கேறியது. ஆனால் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் விஐபி வரிசை அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள். ஆனால் பிளாட்டினம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியை காண வந்த எங்களால் கூட நிகழ்ச்சியை காண முடியவில்லை. இதற்கு கண்டிப்பாக ஏ.ஆர் ரகுமான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று எலைட் மக்கள் ஆதங்கத்துடன் இருந்து வருகின்றனர்.