விக்ரம் படத்தை முதல் நாளே பார்த்து கொண்டாடிய அஜித் குடும்பம். யார் யார் தியேட்டருக்கு போனாங்க தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

ajith-shalini
ajith-shalini

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் படம் நேற்று கோலாகலமாக ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக கே ஜி எஃப் 2, RRR படத்திற்கு இணையாக இந்த படத்தை பேசி வருவது தான் ஹைலைட் அந்த அளவிற்கு விக்ரம்படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மிரட்ட அடுத்த பாதியில் கமல் சூர்யா மிரட்டுகின்றனர் இதனால் படம் முழுவதும் கூஸ்பம்ஸ் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் நிச்சயம் ஒரு எதிர்பார்க்காத வசூலை அள்ளி புதிய சாதனை படைக்கத் இருப்பதாக தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

மேலும் பலரும் நல்ல கருத்துக்களையே கொடுத்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் சாந்தனு ஆகியவர்களை தொடர்ந்து அஜித்தின் மனைவி மற்றும் மகள் இருவரும் திரையரங்கிற்கு சென்று விக்ரம் படத்தை பார்த்து கொண்டாடி உள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

அஜித்தின் படத்தை ஷாலினி முதல் நாள் பார்த்தாரா என்பது ஒரு கேள்விக்குறிதான் ஆனால் உலக நாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடித்து உள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதேபோல ஷாலினிக்கும் கமலஹாசனை  ரொம்ப பிடிக்கும் போல முதல் நாளே வந்து படத்தைப் பார்த்து விட்டு சென்றது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

shalini
shalini