சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் வருடத்திற்கு ஒன்னுரெண்டு படத்தைக் கொடுத்து ஓடுகின்றனர் அதனால் அவர்கள் அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்.. ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் முக்கியமான விசேஷ நாட்களில் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு தனது குடும்பத்துடன் பொழுதை சூப்பராக கழிப்பார்கள்..
அப்படி இந்த தீபாவளிக்கு பல சினிமா பிரபலங்கள் குடும்பத்துடன் வெடிவெடித்து கொண்டாடி அதன் புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.. அதுபோலவே தான் அஜித்தும் எப்பொழுதும் விசேஷ நாட்கள் என்றால் அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு அந்த விழாவை சிறப்பிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
ஆனால் இந்த தீபாவளி அவரால் கொண்டாட முடியவில்லை காரணம் ஹெச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை வைத்து படமாக உருவாகி வருகிறது சூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும்..
டப்பிங் பணிகளில் தற்போது தீவிரம் காட்டியுள்ளதால் துணிவு படத்தில் பிசியாக இருக்கிறார். இதனால் இந்த தீபாவளியை அவரால் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை.. இருப்பினும் ஷாலினி அவரது தங்கை ஷாமிலி மற்றும் ரிச்சர்ட் ரிஷி தீபாவளியை வெடி வெடித்து கொண்டாடினர் மேலும் அந்த புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபாவளி கொண்டாடியது எல்லாம் ஓகே தான் ஆனால் அஜித் இல்லாமல் போனதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது எனக் கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ அஜித் குடும்பம் தீபாவளியை கொண்டாடிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்…