ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் புகைப்படம் அதுவும் ஸ்போர்ட்ஸ் பைக்கில்.!

ajith

தல அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகிய திரைப்படங்கள் தான் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகம் வசூலத்து சாதனை படைத்தது.

மேலும் தல அஜித் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் ஹைதராபாத்தில் அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

மேலும் அஜித்திற்கு பைக் ஓட்டுவதும் கார் ஓட்டுவதும் மிகவும் பிடித்த செயல் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் என்னெவென்றால் அஜித் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் அமர்ந்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படமானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் மங்காத்தாவில் அஜித்தை பார்த்தது போல் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

இது அந்த புகைப்படம்.

ajith
ajith