சினிமாவைப் பொறுத்தவரை முக்கியமாக தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிறதோ அதே போல் இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்புகள் கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபல இயக்குனர் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தற்பொழுது தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் எனவே இவருடைய நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக ஏராளமான இயக்குனர்கள் காத்து வருகின்றனர் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அஜித்தின் அடுத்த படத்தினை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருப்பதாக கூறிவந்த நிலையில் சில தயாரிப்பு நிறுவனங்கள் விக்னேஷ் சிவனின் கதையை வாங்க தயக்கம் காட்டி வருகிறது. எனவே கடந்த வாரம் அஜித் தன் அடுத்த பட இயக்குனரை மாற்றினார்.
எனவே ஏராளமான ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு நியாயம் வேண்டும் என கூறி வருகிறார்கள். இதன் காரணமாக விக்னேஷ் சிவன் தற்பொழுது கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர். விக்னேஷ் சிவன் சொல்லும் அளவிற்கு பெரிய இயக்குனர் இல்லை என்றாலும் நயன்தாராவின் உதவியுடன் அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார்.
எனவே இந்த வாய்ப்பு விக்னேஷ் இவனுக்கு எளிதில் கிடைத்த நிலையில் அவரும் அஜித்தை வைத்து நன்றாக ஒரு படத்தினை உருவாக்க வேண்டும் என சிறப்பான கதைகளை எழுதி வந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வாறு அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணி அமையாதது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.