நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “விடாமுயற்சி” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மகிழ் திருமேனி இந்த படத்தை மிரட்டலாக எடுக்க இருக்கிறார். வெகு விரைவிலேயே சூட்டிங் தொடங்கும் என தெரிய வருகிறது.
ஆனால் தற்பொழுது அஜித் பைக் ரெய்டு மேற்கொண்டு வருகிறார் அண்மையில் கூட நேபாளத்தில் இவர் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ பெரிய அளவில் வைரலாகி என என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித் பிறந்த நாளான மே 1 முன்னிட்டு அஜித் பற்றி செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அதன் படி நடிகர் அஜித்குமார் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அஜித் தனக்கு பிடித்த விஷயத்தை எப்பொழுதுமே கூடவே வைத்துக்கொள்ள விரும்புவார். அந்த வகையில் சினிமாவையும் தாண்டி பைக் ரைடு அஜித்திற்கு ரொம்பவே பிடிக்கும்..
எனவே பைக் ரைடை ஒரு ஆவணப்படமாக உருவாக்க அஜித் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அஜித் ஒளிப்பதிவாளர் நிராவ் ஷாவை உடன் அழைத்துச் சென்று இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது இதற்கு முன் அஜித் பைக் டூர் சென்ற ஆவணப்படம் எடிட் செய்து தயாராக இருக்கிறதாம் அடுத்து இப்பொழுது சென்றுள்ள.
பைக் டூர் ஆவணப் படமாக எடுக்க அஜித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அஜித்தை வைத்துக் கொள்வாரா அல்லது ரசிகர்களுக்கு விருந்தாக கொடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும் இது நடந்தால் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.