தமிழ் சினிமாவை பொருத்தவரை அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டு உள்ளவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் இதில் அஜித் மற்றும் விஜய் இருவரும் தற்போது தங்களுடைய திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்கள் இந்த இரண்டு படங்களும் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.
அதாவது அஜித் அவர்கள் தற்போது ஹெச் வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இதே சமயம் நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜில்லா மற்றும் வீரம் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அஜித், விஜய் தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மூலம் மோத இருக்கிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் நெட்டிசன்கள் வாரிசு ட்ரெய்லரை கழுவி ஊற்றி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த இரண்டு படத்தில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக கலெக்ஷன் பெறும் என ரசிகர்கள் முழு வீச்சில் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து “ஏ கே 62” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அவர்கள் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 17ஆம் தேதி முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் படகுழு தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நேரத்தில் அடுத்ததாக விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிய நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி ஒன்றுக்கொன்று சளைத்தது கிடையாது என்பது போல இரண்டுமே டான் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் நிலையில் இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோத உள்ள நிலையில் அடுத்த படங்களும் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து அஜித், விஜய் அடுத்தடுத்த படங்களிலும் மோத இருப்பதால் இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க ஏகே 62 படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதுவரைக்கும் கமர்சியல் படங்களை தான் கொடுத்துள்ளார் ஒரு டான் கதாபாத்திரம் அவர் கொடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்படி கிடையாது ஏற்கனவே தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியவர் அவர் தான் அதாவது விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இன்னும் தூங்கவில்லை என்று நிருபித்து காட்டி இருக்கிறார்.
அந்த வகையில் விஜய் வைத்த தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது வாரிசு படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித், விஜய் மறுபடியும் மோத உள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.