பார்ப்பவர்களை பிரமிக்கவைத்த அஜித்தின் மகள்.! வீடியோவை பார்த்து அசந்துபோய் நிற்கும் ரசிகர்கள்

ajith family
ajith family

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இந்த படத்தினை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அஜித் இணைய உள்ளார். இது குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் மகளுக்கு தனித்திறமை உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாக ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வந்தார்கள் ஆனால் படம் வெளியான பிறகு ஷாலினி அதில் நடிக்கவில்லை என்பது தெரியவந்தது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு தற்பொழுது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஜோடிக்கு அனோஷகா குமார் என்ற மகளும்,  ஆத்விக் குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். அதில் நடிகர் அஜித்தின் மகள் அனுஷ்காவுக்கு தற்பொழுது 14 வயது ஆகிறது இவர் சோசியல் மீடியாவில் பெரிதாக புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடவில்லை என்றாலும் தன்னுடைய அம்மா, அப்பா உடன் இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் 14 வயதில் படித்துக் கொண்டே ஒருபுறம் கேக் செய்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு அவர் தற்பொழுது பல டிசைன்களில் கேக் மேக் செய்யும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் எப்படி ஒருபுறம் நடிப்பு பைக் ரேஸ் என மிகவும் பிசியாக இருந்து வருகிறாரோ அதேபோல் நடிகர் அஜித்தின் மகளும் படிப்பது கேக் மேக்கிங் 14 வயதிலேயே செய்து வருகிறார்.