அதிதி ஷங்கரை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படும் அஜித் மகள் – ஒரு அப்பாவாக என்ன முடிவு எடுத்துள்ளார் தெரியுமா.?

ajith
ajith

சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர் நடிகர்கள் பலரும் தனது சினிமா பயணம் முடிவதற்குள் தனது மகன், மகளை சினிமா உலகில் இழுத்து விடுவது வழக்கம். அப்படி பல வாரிசு நடிகர், நடிகைகள் சினிமா உலகில் ஜொலித்து வருகின்றனர். இப்பொழுது கூட பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்து இருந்தாலும்..

அவருக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் வேறு வழி இல்லாமல் அந்த ஆசையை நிறைவேற்றினார் ஷங்கர். அதிதி ஷங்கரையும் நாம் சும்மா சொல்லி விடக்கூடாது முதல் படமான விருமன் படத்திலேயே தனது திறமையை காட்டி தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அதிதி ஷங்கருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன அதில் ஒன்றாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிதி ஷங்கரை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகர்க, நடிகைகளின் வாரிசுகள் பலரும் சினிமா பக்கம் திசை திரும்ப ஆரம்பித்துள்ளனர் அந்த வகையில் அஜித்தின் மகளுக்கும் சினிமா நடிக்க ஆசையாக இருக்கிறதாம். ஏற்கனவே அஜித் ஷாலினி இருவரும் சினிமாவில் இருந்து வந்துள்ளதால் அந்த ஆசை தற்பொழுது அஜித்தின் மகளுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை வந்துள்ளது.

ஆனால் அஜித் இந்த மாதிரியான முடிவு எடுத்துள்ளார் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. அஜித் ஒரு விஷயத்தை நன்கு ஆராய்ந்து பிறகு தான் முடிவே சொல்லுவார். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு ஷாலினியை சினிமாவில் நடிக்க கூடாது என சொன்னார் அதை ஷாலினியும் சரியாக கடைபிடித்து இன்றுவரை சினிமா பக்கம் திரும்பாமல்..

குடும்பத்தை அழகான முறையில் பார்த்து அசத்து வருகிறார் அதே போல தனது மகளுக்கும் அவர் தற்பொழுது அறிவுரை கொடுத்துள்ளார். சினிமா எல்லாம் தேவையில்லை  என அட்வைஸ் கொடுத்து உள்ளாராம். இதை ஷாலினியும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு உள்ளதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.