வலிமை படத்தில் அஜித் கதாபாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது.? ட்விஸ்ட் வைக்கும் இயக்குனர் ஹச். வினோத்.!

valimai
valimai

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் அடுத்த வருடம் பொங்கலையொட்டி திரையரங்கில் கோலாகலமாக வெளியாகியிருக்கிறது தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் இந்த படம் ரிலீசாக இருப்பதால் படக்குழு மும்பரமாக  வேலை செய்து வருகிறது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் வில்லன் கார்த்திகேயா, காமெடி நடிகர் யோகிபாபு என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது படம் வெளிவருவதற்கு முன்பாக அப்டேட்டையும் படத்தை பற்றியும் சில செய்திகள்  வருகின்றன அண்மையில் கூட இயக்குனர் வினோத் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு பேட்டியளித்த அவர் வலிமை படம் குறித்தும் அஜித் குறித்தும் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

வலிமை படத்தில் அஜித் சார் ஒரு குடும்பமாக மகனாக நடிப்பதால் அவரது தலைமுடியை கருப்பு நிறத்திலேயே வைக்குமாறு கேட்டுக் கொண்டேன் ஆனால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் பின் அதை புரிந்துகொண்டு ஒத்துக்கொண்டார். வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் புத்திசாலித்தனமானது, நுட்பமானது.

வலிமை கதையை முதலில் எழுதும்போது ஹுமா குரேஷிக்கு காதல் கதாபாத்திரமாக தான் எழுதினேன் பின்பு கொரோனா சூழலில்  கதையை மாற்றப்பட்டதால் விசாரணை அதிகாரியாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். மேலும் அஜித் 61 வது படத்தை அவர் கொடுத்துள்ளார்.

அதாவது அடுத்த படத்தில் அஜித் சாருக்கு அதிக ஆக்ஷன் காட்சிகள் கிடையாது மாறுதலாக அதிகம் வசனம் பேசும் காட்சிகளாக எடுக்க இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். இவர் சொல்லும் போது தெரிந்துவிட்டது அஜித் அவர்களின் 61வது திரைப்படத்தையும் இவர் தான் இயக்க உள்ளார் என்ன தெள்ளத் தெளிவாக தெரிகிறது.