ரிலீசுக்கு முன்பே தளபதிக்கு பயத்தை காட்டிய அஜித்தின் துணிவு படம் – வியாபாரம் மட்டுமே இத்தனை கோடியா.?

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவருக்கு ஒருவரை ரொம்ப பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் அண்மைக்காலமாக  இயக்குனர் ஹச்.வினோத்துடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். இதுவரை இவர்கள் இருவரும் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு திரைப்படங்களிலும் பணியாற்றினார்.

இந்த இரண்டு படங்களும் வெற்றி படங்களாக மாறியதை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து துணிவு என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர் இந்த படம்  அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளதால்..

இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு திரைப்படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு பேரும் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலும் உரிமை கிட்டத்தட்ட 200 கோடி வியாபாரம் ஆகி உள்ளது இப்பொழுது அஜித்தின் துணிவு திரைப்படம் வியாபாரமும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த படம் ஒட்டுமொத்தமாக இதுவரை 280 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது விஜயின் வாரிசு படத்தை விட 80 கோடி அதிகம் என கூறுகின்றனர். மேலும் துணிவு திரைப்படத்தின் OTT உரிமத்தை நெட்பிளீக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் கைப்பற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.