Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். அதனால் இவர் ஒரு படத்தில் நடித்து வரும்போது அவரது அடுத்த படத்திற்காக பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அஜித்தை நாடுவது வழக்கம். அப்படி துணிவு படத்தில் அஜித் நடித்து வரும் போதே அவரது அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷனில் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
பிறகு லைகா ப்ரொடக்ஷனுக்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால் அஜித்தின் படத்தை மகிழ் திருமேனியை இயக்கப் போவதாக அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டது.. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு “விடா முயற்சி” என்றும் பெயர் வைக்கப்பட்டது.. மற்றபடி சூட்டிங் எப்பொழுது தொடங்கும் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் தினம் வந்து கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் திரிஷா தான் ஹீரோயின் என சொல்லப்பட்டது.. மேலும் அண்மையில் அஜித் மோகன்லால் மற்றும் சஞ்சய் தத் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாக விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் வில்லன் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் மட்டும் வில்லன் இல்லை, இரண்டாவது வில்லனும் இருக்கிறார் என கூறப்படுகிறது.. மேலும் அவர் வேறு யாரும் அல்ல பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் தான் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது வில்லன் என கூறப்படுகிறது..
மகிழ்த்திருமேனி மற்றும் ஆரவ் கூட்டணி புதுசு இல்லை ஏற்கனவே மகிழ்த்திருமேனியின் கலக தலைவன் படத்தில் ஆரவ் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.. விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் ஆரவ் நடிக்கிறார் என்றும் கிசுகிசுக்கபடுகிறது.