தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 61’ திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இந்த தினத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
அதாவது அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இத்திரைப்படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் பாடுகளையும் செய்து வருகின்றனர்.
எனவே படப்பிடிப்பு மற்றும் ப்ரொடக்ஷன் பணிகள் ஆகியவை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கார்த்தி நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி ரிலீஸ்சாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனர் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது.
இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவியின் இறைவன் என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.இது குறித்து அதிகாரப்பூர்வமான விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு திரைப்படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா மற்றும் அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்க்கலாம்.
இவ்வாறு வருகின்ற தீபாவளி அன்று அஜித்தின் ‘ஏகே 61’, கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ என மூன்று படங்களும் வெளியாகவுள்ளது.