அஜித்தின் 50வது படமான மங்காத்தா படம் – உலக அளவில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

mankatha
mankatha

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் அஜித் சினிமாவுலகில் பல வெற்றி – தோல்விகளை கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக எப்பொழுதும் இருந்தாலும் நம்பிக்கையுடன் சினிமா உலகில் ஓடுகிறார். அதன் காரணமாக இப்பொழுதும் பல்வேறு படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதுவும் சமீப காலமாக அஜித் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையையும் சிறப்பாக செய்து விடுகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக வருகின்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் ரெடியாக இருக்கிறது.இந்த நிலையில்  நடிகர் அஜித் ஹீரோ,  வில்லனாக மிரட்டிய மங்காத்தா திரைப்படம் அஜித்துக்கு 50வது திரைப்படமும் கூட இந்தப் படத்தில் அவருடன் இணைந்து  மகத், பிரேம்ஜி, அஷ்வின், ராய் லட்சுமி, திரிஷா, ஆண்ட்ரியா, அர்ஜுன், அஞ்சலி, வைபவ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படம் ஆக்ஷன், காமெடி என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் அஜித்தின் 50வது திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

அஜித்தின் மங்காத்தா திரைப்படம் அப்பொழுது வெளியாகி  சுமார் 79 கோடி உலக அளவில் அள்ளியது அஜித்துக்கு முதல் 50 கோடியை தாண்டிய திரைப்படமாக அஜித்தின் மங்காத்தா திரைப்படம் இருந்தது இதுவே அவரது கேரியரில் மிக முக்கியமான படமும் கூட..