தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்குமார் திரை உலகில் எத்தனையோ வெற்றி தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் இவர் அப்பா சென்டிமெண்டில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்கள் தான் அந்த வகையில் அஜித் அப்பாவாக நடித்து அசத்திய 5 திரைப்படங்களைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்..
1. விசுவாசம் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு படமாக இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் அள்ளியது இந்த படத்தில் அஜித் மற்றும் மகளாக நடித்த அனிதா வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை அழ வைத்தது என்றே கூறலாம்..
2. என்னை அறிந்தால் : கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக இருந்தாலும் இந்த படத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் பெரிய அளவு இருந்தது இந்த படம் வெளிவந்து அமோக வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.
3. வரலாறு : அஜித் பெரும்பாலும் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து பார்த்திருப்போம் ஆனால் அவர் மூன்று விதமான வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் வரலாறு இந்த படத்தில் தனது மகனை நன்றாக வளர்க்க அப்பா அஜித் படும் கஷ்டங்கள் எப்படி என என்பதை வெளிப்படையாக காட்டியிருந்தனர். இந்த படம் அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. கிரீடம் : அஜித் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் கிரீடம் இந்த படத்தில் அஜித்திற்கு தந்தையாக ராஜ்கிரன் நடித்திருப்பார் அவர் சொல்லும் பேச்சை கேட்டு தான் சரியாக நடப்பார் கடைசியில் எப்படி போலீசானார் என்பது தான் இந்த படத்தின் கதை.. 5. ஜி : அஜித் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் விஜயகுமார் அஜித்துக்கு தந்தையாக நடித்திருப்பார் தன் மகன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்கள் செய்யும் அப்பாவாக அசத்தி இருப்பார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.