சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ரசிகர்களை சந்திப்பதில்லை மீடியா வெளிச்சத்தில் தென்படுவதில்லை. தனக்கென ஒரு கோட்டை உருவாக்கி அதற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறார் இதனாலையே மற்ற நடிகர்களை விட அஜித் தனித்து தெரிகிறார்.
திரை உலகில் இப்படி ஓடும் இவர் நிஜ உதவி செய்பவராகவும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். அதை பல பிரபலங்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் அஜித்தின் அப்பா சுப்பிரமணி அவர்கள் இயற்கை எய்தினார். இந்த செய்தி திரை பிரபலங்களையும் தாண்டி அஜித் ரசிகர்களை ரொம்பவும் பாதித்தது. முக்கியமான பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் அஜித் மற்றும் அவரது அப்பா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது அனுதாபங்களை தெரிவித்தனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் அப்பா குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளி வருகின்றன அந்த வகையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அஜித் அப்பா குறித்து சில செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் சொன்னது ஐந்து வருடங்களுக்கு முன்பு திருவான்மியூரில் இருந்த அஜித்தின் அப்பா மற்றும் அவரது அம்மா தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்களாம் அப்பொழுது பயில்வான் ரங்கநாதனும் இவர்களுடன் சேர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வாராம் அப்பொழுது அஜித்தின் அப்பாவிற்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் ரொம்ப பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கத்தால் ஏராளமான விஷயங்களை அஜித்தின் அப்பா பகிர்ந்து கொண்டாராம் அதாவது அஜித் முதலில் இருந்து அவரது அப்பா பேச்சை கேட்க மாட்டாராம்.. இதைக் கேட்டதுமே பயில்வானுக்கு தூக்கி வாரி போட்டதாம் அஜித் அவரது மேலாளர் ஆன சுரேஷ் சந்திராவின் பேச்சைதான் கேட்பாராம் அவர் அப்பா என்ன சொன்னாலும் கேட்க மாட்டாராம்..
அதற்கு காரணம் சினிமாவிற்கும் அஜித்தின் அப்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனால் சினிமா பற்றிய விஷயங்களில் அஜித்தின் தந்தை தலையிட மாட்டார் படத்தின் கதை பற்றிய விவாதங்களிலும் தலையிட மாட்டார் எல்லாம் சுரேஷ் சந்திராவை வைத்து தான் அஜித் எல்லாவற்றையும் மேற்கொள்வார் இன்னும் பல விஷயங்கள் பகிர்ந்தாராம்.. ஆனால் அதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.