வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருவர் நடிகர் அஜித் குமார்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.
அந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.. இந்தப் படமும் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படத்திலும் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றி கரமாக முடிந்து தற்போது டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி, சங்கர்,அஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர் இந்த படம் எப்பொழுது வெளிவரும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.. இந்த படத்தை முடித்துவிட்டு..
அடுத்ததாக நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் அவர்களுடன் இணைந்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது அதாவது அஜித்துடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து பிரபல நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் பலரும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இதுவரை திரிஷா மற்றும் அஜித் இணைந்து நான்கு முறை நடித்துள்ளனர். இதன் மூலம் ஐந்தாவது முறையாக இந்த ஜோடி என இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..