தமிழ் சினிமா உலகில் சைலண்டாக இருந்துகொண்டு ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித்குமார் இவரது ஆக்சன் படங்கள் பெரிதும் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது அந்த வகையில் பில்லா, மங்காத்தா, பில்லா 2 போன்ற படங்கள் ரசிகர்களுக்கு இன்றும் ஃபேவரட் படங்களாக இருக்கின்றன.
அதேசமயம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய அளவில் தூக்கிவிட்ட படங்களும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக அஜித் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கொண்டாட வைக்கும் வகையில் சமூக கருத்துக்கள் உள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
அந்தவகையில் நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வலிமை. திரைப்படமும் ஆக்சன் சீன்கள் இருந்தாலும் அதே அளவிற்கு செண்டிமெண்ட்ஸ் சீன்களும் உள்ளதால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சினிமா உலகில் நேர்மையாக ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் நண்பரும், இயக்குனருமான மாரிமுத்து அஜித் பற்றிய சில தெரியாத விஷயங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது. அஜித் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு பணியாற்றியவர்கள் உடன் மற்றும் நெருங்கியவுடன் ஒன்றாக சேர்ந்து பீர் வாங்கி கொடுப்பார் என்றும் அவரும் எங்களுடன் பீர் குடித்து கெட்ட வார்த்தை பேசுவது எல்லாம் சகஜமாக இருப்பார் என கூறியுள்ளார்.
இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதே சமயம் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்துவின் குழந்தை படிப்பு செலவை கூட பத்தாம் வகுப்பு வரை ஏற்றுக்கொண்டதும் அஜித் தான் இந்த செய்தியையும் அவரே தெரிவித்துள்ளார்.